தாமதம் ஏன் தாயே - காமாக்ஷி
ராகம் : ஆபேரி / பீம்ப்ளாஸ் தாளம் : ஆதி
பல்லவி :
தாமதம் ஏன் தாயே ? - காமாக்ஷி
நின் தனயனை போஷிக்க
அனுபல்லவி :
சேய் புசியாவிடின், தாய் தான் விடுவளோ !
தயாபரியே தாயே தமியேனுக்கா வர... (தாமதம்...)
சரணம்:
1. தஞ்சைத் தரணிக்கு தாயாகி வந்தவள்
நன்செய் வேதியர்க்கு தானுண்டு என்றவள்
பண்செய் பாவலர்க்கு பார்ப்புகழ் தந்தவள்
நின்சேய் என்னையும் நேராக்கி ஆண்டிட.. (தாமதம்...)
2. சிந்தாமணி த்வீப பீட வாஸிநி
மந்தார ப்ரிய மாதவ ஸோதரி
எந்தாய்! எந்தாய்! என்று க்ருஷ்ணனும் அரற்றிட
வந்தேன் வந்தேனென்று அருள் மழை பொழிந்திட... (தாமதம்...)
No comments:
Post a Comment